ஈசி தக்காளி குருமா
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 4
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 2 மேசைக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும். தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி நன்கு வதங்கியதும், அரைத்ததை ஊற்றி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.