ஈசி சிக்கன் குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிதளவு

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 2 துண்டுகள்

கசகசா - 1 தேக்கரண்டி

சோம்பு - 1 தேக்கரண்டி

பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு - தாளிக்க

செய்முறை:

சிக்கனை சுத்தம் செய்து கொள்ளவும்.

வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். தக்காளியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளிக்கவும்.

பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தக்காளியைச் சேர்த்து வதக்கவும்.

தக்காளி வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து, பச்சை வாசம் போக வதக்கி சிக்கனை சேர்த்து வதக்கவும்.

நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து வதக்கவும்.

அதனுடன் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை அரைத்துச் சேர்க்கவும்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் வரும் வரை வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

இது இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகைகளுக்கு பொருத்தமாக இருக்கும்.