இன்ஸ்டென்ட் காய்கறி குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பொடியாக நறுக்கி வேக வைத்த கேரட், பீன்ஸ், உருளை - 1 கப்

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 2

பசும் பால் பொடி - 1/2 கப்

இஞ்சி, பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

மல்லிப்பொடி - 1/2 தேக்கரண்டி

பட்டை, கிராம்பு, ஏலப்பொடி - 1/4 தேக்கரண்டி

குருமிளகுப் பொடி - 1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய தக்காளி - 1/2

பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

அதில் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து வதக்கிய பின் உப்பு சேர்க்கவும்.

பிறகு மல்லிப்பொடி சேர்த்து வதக்கவும். அதனுடன் வேக வைத்த காய்கறிகளை சேர்த்து கிளறவும்.

பால் பொடியுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கலக்கி வெந்த காய்கறியுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்து குருமா போல் கெட்டியாக வரும்பொழுது அடுப்பை அணைத்து கரம் மசாலாத்தூள், குருமிளகு பொடி, தக்காளி, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: