இட்லி முட்டை குருமா
தேவையான பொருட்கள்:
தேங்காய் - ஒரு மூடி
சோம்பு - 2 தேக்கரண்டி
மல்லி - 2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சின்ன வெங்காயம் - 10
பூண்டு - 6 பல்
முட்டை- 2
எலுமிச்சம்பழம் - ஒரு மூடி
பட்டை - ஒரு துண்டு
கிராம்பு - 2
உருளைக்கிழங்கு - 2
கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தேங்காய், சோம்பு, சீரகம், மல்லி சேர்த்து அரைக்கவும். உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளமாக நறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பட்டை, கிராம்பு தாளிக்கவும்.
வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு போட்டு வதக்கவும்.
அரைத்த மசாலாவை ஊற்றி கொதிக்க விட்டு உப்பு சேர்க்கவும். நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். உருளைக்கிழங்கை போடவும்.
5 நிமிடம் அப்படியே கொதிக்க விடவும். (கரண்டியால் கலக்கக்கூடாது)
மேலும் 15 நிமிடம் கொதித்ததும் இறக்கவும்.
இறக்கியதும் எலுமிச்சம்பழம் பிழியவும்.