ஆட்டுக்கால் குருமா

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

முழு ஆட்டுகால் - ஒன்று

வெங்காயம் - 5

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 5

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

தயிர் - 1 கப்

தேங்காய் - அரை மூடி

முந்திரி - 6

கசகசா - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி - ஒரு கொத்து

புதினா - பத்து இதழ்

பட்டை - பெரியது ஒன்று

கிரம்பு - 3

ஏலம் - 2

டால்டா - 1/2 தேக்கரண்டி வாசனைக்கு

எண்ணெய் - 3 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஆட்டு காலை சுத்தம் செய்து கழுவவும். வினிகரில் ஊற வைத்து அதில் உள்ள முடி, அழுக்கு எல்லாம் நல்ல தேய்த்து எடுக்கவும். கட்டிங் போர்டில் கூட வைத்து தேய்க்கலாம்.

பிறகு அதில் இரண்டு தேக்கரண்டி இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு, சிறிது உப்பு, மஞ்சள் தூள் போட்டு குக்கரில் கால் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

அது வெகுவதறுற்குள் குருமா தாளித்து விடலாம்.

சட்டியை காயவைத்து ஒரு பெரிய பட்டை, இரண்டு ஏலம், கிராம்பு மூன்று போட்டு வெடித்ததும் வெங்காயத்தை போட்டு நல்ல வதக்கவும். நிறம் மாறியதும், ஐந்து தேக்கரண்டி இஞ்சி பூன்டு பேஸ்ட் போட்டு வதக்கவும். இரண்டு நிமிடம் சிம்மில் வைக்கவும்.

பிறகு பாதி கொத்தமல்லி, புதினா போட்டு வதக்கி தக்காளியை அரிந்து போட்டு பச்சை மிளகாயை ஒடித்து போட்டு தீயை குறைத்து வைத்து தக்காளியை வேக விடவும்.

தக்காளி வெந்ததும் மிளகாய் தூள், உப்பு சேர்த்து தயிரையும் நல்ல அடித்து ஊற்றவும்.

இப்போது வெந்த காலை சேர்க்கவும். சேர்த்து கொதிக்கவிட்டு தேங்காய், முந்திரி, கசகசா மூன்றையும் பட்டு போல் அரைத்து ஊற்றவும்.

குறிப்புகள்: