அவரக்காளு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஃப்ரெஷ் மொச்சை - 2 கப்

வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை - சிறிது

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சாம்பார் பொடி - 3 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - சிறிது

தாளிக்க சோம்பு - 1/4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவையான அளவு

வதக்கி அரைக்க:

பட்டை- 2

லவங்கம் - 2

ஏலக்காய் - 2

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 1

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், மிளகு, சீரகம் சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கி எடுத்து ஆறவைக்கவும்.

ஆறியதும் மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

அதே குக்கரில் மீண்டும் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சோம்பு தாளித்து, வெங்காயம் சேர்த்து வதக்கவும். பாதி வதங்கியதும் கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.

பிறகு தூள் வகைகள் சேர்த்து பிரட்டி, மொச்சையைச் சேர்த்து பிரட்டவும்.

தேவையான அளவு நீர் விட்டு மூடி 3 விசில் அல்லது ஒரு விசில் விட்டு 10 நிமிடங்கள் சிம்மில் வைத்து வேகவிடவும்.

பிறகு அரைத்த மசாலாவைச் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

சூடான தோசை, இட்லி, சப்பாத்தி, சாதம் எல்லாவற்றுக்கும் அருமையான ஜோடி.