அவசர உருளைக்கிழங்கு குருமா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 4

பட்டை - 1

லவங்கம் - 3

சோம்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - தேவையான அளவு

வெங்காயம் - 2

தக்காளி - 2

இஞ்சி விழுது - 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி

கறிமசாலாத் தூள் - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 5 தேக்கரண்டி

கறிவேப்பிலை - சிறிது

எண்ணெய் - 4 தேக்கரண்டி

உப்பு - சிறிது

செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம், சோம்பு, பெருங்காயம், வெங்காயம், இஞ்சி விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.

பின் தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

அதில் மிளகாய் தூள், கொத்தமல்லிதூள், கறிமசாலாத்தூள் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

அதனுடன் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து கொதிக்க வைக்கவும்.

கடைசியில் தேங்காய் துருவல், கறிவேப்பிலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: