அரைத்த கடலைபருப்பு குருமா

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடுகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/4 தேக்கரண்டி

உளுந்து - 1/4 தேக்கரண்டி

கடலைபருப்பு - 1/4 தேக்கரண்டி

நறுக்கிய வெங்கயம் - 1

நறுக்கிய தக்காளி - 1

கருவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது

எண்ணெய் - 1 குழிக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

மசாலா அரைக்க:

தேங்காய் - 1 மேஜைக்கரண்டி

கசகசா - 1/2 தேக்கரண்டி

எண்ணெய்'ல் வருத்த கடலை பருப்பு - 4 அல்லது 5 தேக்கரண்டி

பச்சை மிளகாய் - 2 அல்லது 3

செய்முறை:

மசாலா அரைத்து தயாராக வைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு போட்டு தாளிக்கவும்.

இதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும். சிவந்ததும் தக்காளி சேர்த்து குழய வதக்கவும்.

இத்துடன் அரைத்த மசாலா, தண்ணீர், உப்பு, கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து கொதிக்கவிடவும். பிண்பு இறக்கி பரிமாறவும்

குறிப்புகள்: