ஹோட்டல் தயிர்வடை

on on off off off 2 - Ok!
2 நட்சத்திரங்கள் - 2 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெள்ளை முழு உளுந்து - 1/2 படி

துவரம் பருப்பு - 3 தேக்கரண்டி

பச்சரிசி - 2 தேக்கரண்டி

பச்சைமிளகாய் - 4

குறுமிளகு - 1 தேக்கரண்டி

இஞ்சி - 1 சிறிய துண்டு

பொடியாக நறுக்கிய மல்லி தழை - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

கேரட் ஒன்று -1 துருவியது

காராபூந்தி - 50 கிராம்

பெருங்காயப்பொடி - 1 தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1/2 கப்

கெட்டி தயிர் - 1/2 லிட்டர்

பால் - 1 டம்ளர்

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

துவரம் பருப்பு ,உளுந்தை 1/2 மணி நேரம் ஊறவக்கவும் தண்ணீரை சுத்தமாக வடித்துவிட்டு பருப்பு 2 பச்சை மிளகாய் , பச்சரிசி இவையனைத்தயும் பூக்க அரைக்கவும். தண்ணீர் அதிகம் சேர்க்க வேண்டாம். மாவை வழிப்பதற்கு 1 நிமிடம் முன்பு உப்பு சேர்த்து 1 நிமிடம் ஓடவிட்டு எடுக்கவும். மாவை எடுத்து தண்ணீரில் போட்டால் மிதக்க வேண்டும் அது தான் சரியான பதம்.

தயிரை தண்ணீர் இல்லாமல் கடைந்து வைக்கவும். தேங்காய் துருவல் , 2 பச்சைமிளகாய் சேர்த்து நைசாக அரைக்கவும். அரைத்த் விழுது உப்பு இரண்டையும் கடந்த தயிரில் கலக்கி வைக்கவும். பெருங்க்காயத்தையும் சேர்க்கவும். பிரிட்ஜில் வைக்கவும்.

பாலை 1 டம்ளர் தண்ணீரில் கலந்து வெதுவெதுப்பாக சுடவைக்கவும்.

வடை மாவில் இஞ்சியை பொடியாக நறுக்கி போடவும். குறுமிளகை ஒன்றிரண்டாக உடைத்து போடவும். மாவினை உருட்டி வடை தட்டி நடுவில் ஓட்டை போட்டு பொரித்தெடுக்கவும். பொரித்த வடைகளை பாலில் ஒரு நிமிடம் நனைக்கவும். பின் பிரிட்ஜில் வைத்த தயிரில் பாதி எடுத்து பாலில் நனைத்த வடைகளை அமிழ்த்தவும். 5 நிமிடம் கழித்து தயிரிலிருந்து எடுத்து ஒரு டிரேயில் அடுக்கவும். அதன் மேல் கொஞ்சம் காராபூந்தி, மல்லி தழை, கேரட் துருவல் தூவி அலங்கரிக்கவும்.

பறிமாறும் போது குழிவான தட்டில் பிரிட்ஜில் உள்ள தயிரை பாதியளவு ஊற்றி அதன் மேல் அலங்கரித்த வடைகளை வைத்து பறிமாறவும்

குறிப்புகள்: