ஸ்டஃப்ட் ப்ரெட் பஜ்ஜி

on on on on off 1 - Great!
4 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ப்ரெட் ஸ்லைஸ் - 10

உருளைக்கிழங்கு - 2

பூண்டு - 2 பல்

பச்சைமிளகாய் - 1

வெங்காயம் - 1

மிளகாய்தூள் - 1/4 தேக்கரண்டி

மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 2 கொத்து

மல்லிக்கீரை (பொடியாக வெட்டியது) - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

மேல்மாவு செய்ய:

கடலைமாவு - 1/2 கப்

மிளகாய்தூள் - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

பெருங்காயம் (விரும்பினால்) - 1/4 தேக்கரண்டி

செய்முறை:

உருளைக்கிழங்கை வேகவைத்து உதிர்த்துக் கொள்ளவும். வாணலியில் 1 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கறிவேப்பிலை, பூண்டு சேர்த்து வதக்கவும்.

வதங்கியதும் உதிர்த்த உருளைக்கிழங்கு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து மேலும் 2 நிமிடம் வதக்கி மல்லிக்கீரை சேர்த்து கிளறி இறக்கவும்.

மேல்மாவு செய்ய கொடுக்கப்பட்ட பொருட்களோடு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தை விட சற்று தளர்த்தியாக கலக்கவும்.

ப்ரெட் ஸ்லைஸை சப்பாத்தி குழவியால் அழுத்தி தேய்த்து மெலிதாக்கவும்.

மெலிதாக்கிய ப்ரெட்டை முக்கோணமாக வெட்டவும்.

இப்படி மெலிதாக்கிய ப்ரெட்டின் மீது உருளைக்கிழங்குக் கலவையை ஒரு மேசைகரண்டி அளவு எடுத்து பரவலாக வைத்து இன்னொரு ப்ரெட் ஸ்லைஸால் மூடி ஓரங்களை அழுத்தி விடவும். இதை பஜ்ஜி மாவில் முக்கி சூடான எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: