ஸ்டஃடு பிரெட் பஜ்ஜி





தேவையான பொருட்கள்:
ஸ்டஃபிங்க்கு:
பிரெட் - 6 ஸ்லைஸ்
உருளைகிழங்கு (வேக வைத்தது) - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
கொத்தமல்லி (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
எலுமிச்சம் பழம் - 1/2
உப்பு - தேவையான அளவு
பஜ்ஜிக்கு மாவு:
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 3 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
பிரெட் ஸ்லைஸை முக்கோணமாக நறுக்கி வைக்கவும்.
வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கவும்.
உருளைக்கிழங்கை உதிர்த்து போட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம் சேர்த்து திக்காக பஜ்ஜி மாவு போல் கரைக்கவும்.
பிரட் ஸ்லைஸ் மேல் உருளைகிழங்கு கலவையை பரவலாக வைத்து இன்னொரு ஸ்லைஸால் மூடி, கடலை மாவு கலவையில் முக்கி, எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.