வேர்க்கடலை வடை
தேவையான பொருட்கள்:
பச்சை வேர்க்கடலை - 200 கிராம்
அவல் - 75 கிராம்
பொட்டுக்கடலை மாவு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 1
காய்ந்த மிளகாய் - 1
சோம்பு - 1/2 தேக்கரண்டி
பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் (நறுக்கியது) - 5 மேசைக்கரண்டி
கீரை - 25 கிராம்
வெங்காயம் - 75 கிராம்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வடை செய்ய தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அவலுடன் தண்ணீர் ஊற்றி கழுவி உடனேயே தண்ணீரை நன்கு வடித்து விடவும். கீரை மற்றும் வெங்காயத்தை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
அவல், வேர்க்கடலை, பச்சைமிளகாய், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்தெடுத்த கலவையுடன் நறுக்கின இலைகள், வெங்காயம், சோம்பு, பொட்டுக்கடலை மாவு, உப்பு சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
மாவை தண்ணீரை கையில் தொட்டுக் கொண்டு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஒவ்வொரு உருண்டையாக எடுத்து கையில் வைத்து தட்டையாக தட்டி போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.