வேர்க்கடலை பக்கோடா (1)
0
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு - 100 கிராம்
மைதா மாவு - 100 கிராம்
கடலை மாவு - 100 கிராம்
அரிசி மாவு - 2 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 தேக்கரண்டி
வறுத்த வேர்க்கடலை - 100 கிராம்
மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லா மாவகைகளையும், பேக்கிங்பவுடர் சேர்த்து சலித்துக் கொள்ளவும்.
சலித்த மாவில் வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பதமாக குழைக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் சிறு சிறு துண்டுகளாகப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.