வேர்க்கடலை பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலை பருப்பு (வறுக்காதது) - 2 கப்

கடலை மாவு - 1 1/4 கப்

அரிசி மாவு - 1 கப்

மிளகாய் தூள் - 2 1/2 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வேர்க்கடலையுடன் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி -பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு சேர்த்துப் பிசறிவையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலவையில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் பிசறி, எண்ணெயில் போட்டு, மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: