வெள்ளை பணியாரம்
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பச்சை அரிசி (தலை தட்டி) - 1 கப்
உளுந்து பருப்பு - அரிசியின் மேல் கோபுரம் போல் குவித்து எடுக்கவும்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பச்சை அரிசி 1 கப் தலை தட்டி எடுத்துக் கொள்ளவும். அந்த கப்பின் மேல் கோபுரம் போல் உளுந்து பருப்பை போட்டு ஒரு பாத்திரத்தில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்னர் சிறிது உப்பு போட்டு நல்லா நைசா அரைத்துக் கொள்ளவும்.
ரொம்ப தண்ணியாகவும் இல்லாமல் ரொம்ப கெட்டியாகவும் இல்லாமல் மீடியமாக இருக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெயில் விட்டு காய்ந்ததும் சிறிது சிறிதாகவும் ஒரு குழி கரண்டியில் எடுத்து ஊற்றவும். வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.