வெள்ளைக் கொண்டைக்கடலை வடை

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெள்ளைக் கொண்டைக் கடலை - 1 கப்

பச்சை மிளகாய் - 3

பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள் - 1 கப்

பொடியாக நறுக்கிய கோஸ் - 1/4 கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - 2 மேசைக்கரண்டி

துருவிய இஞ்சி - 1/2 துண்டு

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கொண்டைக் கடலையை கழுவி குறைந்தது 12 மணி நேரம் ஊறவைக்கவும்.

கடலையை வடிகட்டி பச்சை மிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

அரைத்த விழுதுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், கோஸ், கொத்தமல்லி, இஞ்சி சேர்த்து கலக்கவும்.

வாணலியில் எண்ணெயை ஊற்றி கொதிக்கவிடவும்.

மாவை சிறு உருண்டைகளாக எடுத்து வடைகளாக தட்டிப் போடவும். நெருப்பின் அளவைக் குறைத்து பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: