வெந்தயக்கீரை பக்கோடா
தேவையான பொருட்கள்:
வெந்தயக்கீரை - 2 கட்டு
கோதுமை மாவு - 4 மேசைக்கரண்டி
கடலை மாவு - 4 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரைத் தேக்கரண்டி
மிளகு - 1 தேக்கரண்டி
தயிர் - 4 தேக்கரண்டி
சர்க்கரை - 2 தேக்கரண்டி
தனியா - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 6
இஞ்சி - சிறுதுண்டு
பெருங்காயம் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெந்தயக் கீரையைக் காம்புகள் நீக்கிக் கழுவிச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
நான்கு தேக்கரண்டி எண்ணெயோடு மற்ற பொருட்களையும் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் கொட்டி, கீரையையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
சிறிதளவு தண்ணீர் தேவையெனில் சேர்த்துக் கொள்ளலாம். இட்லி மாவு பதத்திற்கு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் ஒரு தேக்கரண்டி அளவிற்கு கலவையை எண்ணெய்யில் விட்டு மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து பரிமாறவும்.