வெண்டைக்காய் பக்கோடா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 200 கிராம்

வெங்காயம் - 1

கடலைமாவு - 1 கப்

கார்ன்ப்ளார் - 1/2 கப்

முந்திரிப்பருப்பு - 10

மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி

தனியாத்தூள் - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளவும். முந்திரியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வெண்டைக்காயை ஓரங்குல நீளத்திற்கு விருப்பம் போல் வெட்டிக் கொள்ளவும் அல்லது வட்டமாகவும வெட்டிக் கொள்ளலாம்.

ஒரு பாத்திரத்தில் வெண்டைக்காயுடன் நறுக்கிய வெங்காயம், முந்திரிப்பருப்பு, உப்பு, மிளகாய்தூள், தனியாத்தூள் சேர்த்து முதலில் நன்கு பிசைந்துக் கொள்ளவும். பிறகு கடலை மாவு மற்றும் சோள மாவு சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசறிக் கொள்ளவும். இந்த கலவையை அரைமணிநேரம் ஊற வைக்கவும்.

பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி பிசைந்து வைத்திருக்கும் வெண்டைக்காயை சிறிது சிறிதாகப்போட்டு நன்கு சிவக்க பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: