வெஜ் வடை

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வேகவைத்து மசித்து கொள்ள:

கருனைக்கிழங்கு - 100 கிராம்

உருளைக்கிழங்கு - 100 கிராம்

வாழைக்காய் - 100 கிராம்

வதக்கி பிசைந்து கொள்ள:

எண்ணெய் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1 (நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்.)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி

தக்காளி - 1/4 பாகம்

தயிர் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி

துருவிய கேரட் - 50 கிராம்

துருவிய முள்ளங்கி - 50 கிராம்

துருவிய கேபேஜ் - 50 கிராம்

கொத்தமல்லி தழை - ஒரு கட்டு ( நன்கு பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் - இரண்டு ( உள்ளே விதை எடுத்து நன்கு பொடியாக நறுக்கி கொள்ளவும்)s

உப்பு - தேவையான அளவு

சீரக தூள் - அரை தேக்கரண்டி

கரம் மசாலா தூள் - ஒரு சிறிய தேக்கரண்டி

கடைசியில் கலக்க:

பொட்டுக்கடலை - 50 கிராம் (பொடித்து கொள்ளவும்)

மைதா - ஒரு தேக்கரண்டி

கார்ன் ஃப்ளார் மாவு - ஒரு தேக்கரண்டி

செய்முறை:

வாழைக்காய், கருனைக்கிழங்கு, உருளைக்கிழங்கு மூன்றையும் வேகவைத்து மசித்து கொள்ளவும்.

எண்ணெயில் வதக்க வேண்டியவைகளை போட்டு வெங்காயம், இஞ்சி பூண்டு தாளித்து மற்ற பொருட்கள் அனைத்தையும் போட்டு ஐந்து நிமிடம் கிளறி ஆற வைக்கவும்.

கடைசியில் கொத்தமல்லி தழை, கரம் மசாலா துள் போட்டு உடனே இறக்கி மசித்த கிழங்கு வகைகள், வதக்கிய காய்கறி கலவை, மைதா, கார்ன் ஃப்ளார் மாவு, பொட்டுக்கடலை பொடி சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடம் ஊறவைக்கவும்.

தண்ணியாக இருப்பது போல் தோன்றினால் பிரெட்டை காய்ந்த மிக்ஸியில் தூளாக்கி போட்டு கலந்து கொள்ளுங்கள். கலவை கெட்டியாக இருக்கவும்.

தோசை தவ்வாவில் எண்ணெய் விட்டு ஷலோ ப்ரை செய்யவும்.

குறிப்புகள்: