வெஜ் பக்கோடா
தேவையான பொருட்கள்:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
முட்டைக்கோஸ் - 1 மேசைக்கரண்டி
கேரட் - 1 மேசைக்கரண்டி
பீட்ரூட் - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1/4 கப்
முள்ளங்கி - 1 மேசைக்கரண்டி
சேனைக்கிழங்கு - 1 மேசைக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/4 தேக்கரண்டி
இஞ்சி துருவியது - 1 மேசைக்கரண்டி
பூண்டு (தட்டி கொள்ளவும்) - நான்கு பல்
சீரகம் - அரை தேக்கரண்டி
கறிவேப்பிலை (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
புதினா (பொடியாக நறுக்கியது) - 1/4 கப்
டால்டா (உருக்கியது) - 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
எல்லா காய்களையும் நீளவாக்கில் கேரட் துருவியில் சீவிக்கொள்ளவும்.
அதில் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்து பிசைந்து கொள்ளவும். காயிலேயே தண்ணீர் விடும், இல்லையென்றால் லேசாக தண்ணீர் தெளித்து பிசறி சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து எண்ணெயை வடித்து சாப்பிடவும்.