வெஜ் சமோசா

on on on off off 3 - Good!
3 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்

வெண்ணெய் - சிறிது

பொரிக்க எண்ணெய் - தேவையான அளவு

உப்பு - சிறிது

உள் வைக்க:

உருளைக்கிழங்கு - 1

வெங்காயம் - 1

பட்டாணி - 1/4 கப்

பச்சை மிளகாய் - 1

மஞ்சள் பொடி - சிறிது

இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி

மல்லி தழை - சிறிது

கடுகு, உளுந்து - சிறிது

செய்முறை:

முதலில் தேவையானவற்றை தயாராக வைக்கவும்.

மாவில் வெண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து வைக்கவும்.

கிழங்கை அவித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு தாளித்து வெங்காயம் போட்டு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்கு வதக்கவும்.

பின்னர் பட்டாணியை போட்டு வேகும் வரை வதக்கவும்.

அதில் மசித்த உருளை, மஞ்சள் பொடி, பச்சை மிளகாய், மல்லி தழை, உப்பு போட்டு நன்கு வதக்கவும்.

வதங்கியதும் கப்பில் எடுத்து ஆற வைக்கவும்.

சமோசா செய்ய மாவை சிறிதாக படத்தில் உள்ளது போல் வளர்த்தி கிழங்கு கலவையை கொஞ்சம் உள் வைத்து மடிக்கவும்.

அனைத்தையும் இதுபோல் செய்து வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி செய்து வைத்திருக்கும் சமோசாவை பொரித்தெடுக்கவும்.

குறிப்புகள்: