வெஜ் கட்லெட்
தேவையான பொருட்கள்:
வேகவைத்து கொள்ள:
கருணைக்கிழங்கு - 100 கிராம்
உருளைக்கிழங்கு - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பட்டாணி - 25 கிராம்
பீன்ஸ் - 25 கிராம்
வதக்கி கொள்ள:
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை - 1/2 கட்டு
புதினா - 1/4 கட்டு
உப்பு - தேவைக்கு
கரைத்து கொள்ள:
சோள மாவு - தேவையானது
மைதா மாவு - தேவையானது
ப்ரெட் ஸ்லைஸ் - தேவையானது
க்ரெம்ஸ் பவுடர் - தேவையானது
செய்முறை:
முதலில் கேரட், உருளையை கழுவி தோலெடுக்க வேண்டாம், பிறகு குக்கரில் போடவும்.
கருணைகிழங்கு(சேனை) தோல் மண்ணாக இருக்கும். தோலை எடுத்து விட்டு கழுவி அதை நான்காக நறுக்கி உருளையுடன் போட்டு அந்த தண்ணீரில் கொஞ்சமாக உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைத்து தண்ணீரில்லாமல் வடித்து உருளை, கேரட்டில் உள்ள தோளை நீக்கி விட்டு மொத்தமாக சேர்த்து பிசைந்து தனியாக வைக்கவும்.
ப்ரெஷ் பட்டானியை பீன்ஸுடன் சேர்த்து வேக வைத்து வடித்து கொள்ளவும்.
இப்போது ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடுப்படுத்தி அதில் வெங்காயம், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி போடவும். லேசாக வதக்கினால் போதும் பிறகு இஞ்சி பூண்டு பேஸ்ட், கொத்தமல்லி, புதினா, கரம் மசாலா தூள் வதக்கி உடனே இறக்கி ஆற வைக்கவும்.
ஆற வைத்து இந்த கலவை, கிழங்கு கலவை ஒன்றாக பிசைந்து வைக்கவும்.
இப்போது ப்ரெட்டை தண்ணீரில் தோய்த்து பிழிந்து விட்டு எந்த வடிவம் வேண்டுமோ அந்த வடிவத்தில் அதில் இந்த கலவையை வைத்து மேலே மற்றொரு ப்ரெட்டை வைத்து மூடி டிப் பண்ண தேவையான அளவு மைதா, சோளமாவு கரைத்து கொள்ளுங்கள். அதில் டிப் செய்து க்ரம்ஸ் பவுடரில் இரு பக்கமும் பிரட்டி ஒரு மணி நேரம் ப்ரிட்ஜில் வைத்து பிறகு எடுத்து பொரிக்கவும்.