வெஜிடபிள் போண்டா
தேவையான பொருட்கள்:
மேல் மாவிற்கு:
கடலை மாவு - 1 கப்
அரிசிமாவு - 1/4 கப்
சில்லி பவுடர் - 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா- பின்ச்
பெருங்காயத்தூள் - பின்ச்
வெஜிடபிள் கலவை:
உருளைக்கிழங்கு - 1
நறுக்கிய கேரட், பீன்ஸ், கோஸ் - அரை - 1கப் சிறியது
இஞ்சி - சிறிய துண்டு
மிளகாய் - 3
கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் - 1
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் மேல் மாவிற்கு தேவையானவற்றை ஒரு பவுலில் எடுத்து அளவாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
உரூளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.
காய்கறிகளை நறுக்கி கொள்ளவும். இஞ்சி, மிளகாய், மல்லி இலை, கறிவேப்பிலை, வெங்காயம் பொடியாக நறுக்கவும்.
நறுக்கிய காய்கறிகளுடன் வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு, உப்பு சேர்த்து சிறிய உருண்டைகளாக பிடிக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு காய விடவும். உருண்டையை கரைத்து வைத்த மாவுக்கலவையில் லேசாக புரட்டி காய்ந்த எண்ணெயில் போட்டு செந்நிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.