வெஜிடபிள் பிரட் வடை

on on on off off 8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பிரட் துண்டுகள் - 10 ஸ்லைஸ்

பெரிய வெங்காயம் - 1

தக்காளி - 1

பச்சை மிளகாய் - 2

புதினா - 1/2 கட்டு

கொத்தமல்லி - சிறிதளவு

பூண்டு - 4 பல்

இஞ்சி - சிறிதளவு

வெண்ணெய் - 1 ஸ்பூன்

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளி , இஞ்சி , புதினா பூண்டு இவற்றை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் கொத்தமல்லியை பொடி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிரட்டை ஓரத்தை எல்லாம் நிக்கிவிட்டு உதிர்த்துக் கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் வெண்ணெய்யை போட்டு அதில் உப்பு தக்காளி இஞ்சி அரைத்த் விழுது மற்றும் வெங்காயம் கோத்த மல்லியைப் போட்டு நன்கு கலக்கவும். பிறகு தூளாக்கிய பிரட்டையும் போட்டு நன்கு பிசையவும். கலவை வடை மாவு பதத்திற்கு வந்த உடன் எண்ணெயில் போட்டு பொறித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: