வெஜிடபிள் சமோசா
தேவையான பொருட்கள்:
வேகவைத்த உருளைக்கிழங்கு - 100 கிராம்
பச்சைபட்டாணி - 100 கிராம்
கேரட் - 100 கிராம்
பீன்ஸ் - 100 கிராம்
வெங்காயம் - 100 கிராம்
பச்சைமிளகாய் - 10
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிது
பட்டை - 1
இலவங்கம் - 1
மைதா - 500 கிராம்
மிளகாய்ப்பொடி - 1 தேக்கரண்டி
மல்லிப்பொடி - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மைதாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு உப்பு போட்டு பிசையவும். வேகவைத்த உருளைக்கிழங்கை பொடியாக நறுக்கவும். பீன்ஸ், கேரட், பச்சை பட்டாணி ஆகியவற்றை உப்பு போட்டு வேகவைக்கவும்.
ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய்விட்டு பட்டை, லவங்கம் தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கிய பின் இஞ்சி, பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
அதனுடன் மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, மஞ்சள் தூள் போட்டு கிளறவும். வதங்கியதும் வேகவைத்த காய்கள், உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்கி இறக்கவும்.
மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்தியாக வட்டமாக தேய்த்து தோசைக்கல்லை சிறு தீயில் சூடாக்கி தண்ணீர் பசை போகும்வரை போட்டு எடுக்கவும்.
பிறகு அரை வட்டமாக நறுக்கிக் கொண்டு முக்கோணமாக மடித்து பிரட்டிய காய்களை சிறிதளவு எடுத்து உள்ளே வைத்து மூடவும்.
எல்லாவற்றையும் தயார் செய்துக் கொண்டு ஒரு கடாயில் எண்ணெய்யை காய வைத்து சமோசாவை போட்டு பொரித்தெடுக்கவும்.