வெங்காய பஜ்ஜி

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 2

கடலை மாவு - 1 கப்

சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி

பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி

சோடா உப்பு - 2 சிட்டிகை

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கடலைமாவை கட்டில்லாமல் சலித்து அதனுடன் உப்பு, சிவப்பு மிளகாய் தூள்,சோடாமாவு, பெருங்காயத் தூள் சேர்த்து நன்கு கலக்கி தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்.

வெங்காயத்தை தோலுரித்து அதை கொஞ்சம் நைசாக வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணையை காய வைத்து காய்ந்ததும் ஒரு ஸ்பூன் எண்ணையை பஜ்ஜி மாவில் விட்டு ஒரு கலக்கு கலக்கவும்.

பின் வெட்டிய வெங்காயத்தை மாவில் முக்கி எண்ணையில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: