வெங்காய பக்கோடா (2)
0
தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் - 4
சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
பூண்டு - 7 பல்
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 2 கொத்து
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 3/4 மேசைக்கரண்டி
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
அரிசி மாவு - 1/4 கப்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, பூண்டு, சோம்பு, கரம் மசாலா தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
இந்த கலவையுடன் நீளமாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின்னர் இதில் தேவையான அளவு தண்ணீரை தெளித்து பிசைந்து வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கலந்து வைத்திருக்கும் வெங்காயக் கலவையை எடுத்து உதிர்த்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.