வெங்காய பக்கோடா (1)

on on on on off 3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 1/4 கிலோ

அரிசி மாவு - 150 கிராம்

சமையல் சோடா - 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 4

சிறிய வெங்காயம் - 20

கறிவேப்பிலை - 3 கொத்து

சோம்பு - 1 மேசைக்கரண்டி

பச்சை மிளகாய் - 5

பூண்டு - 5 பல்

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் சோம்பை பொடியாக்கி, பூண்டு, மிளகாயை நன்றாக தட்டிக் கொள்ளவும்.

கறிவேப்பிலை, வெங்காயங்களை மிக மெல்லியதாக நறுக்கவும்.

கடலை மாவு, அரிசி மாவு இரண்டையும் சலித்து கட்டியில்லாமல் வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணையை சூடாகவும்.

மாவில் சோம்பு தூள், தட்டிய பூண்டு, மிளகாய், உப்பு, சோடா, கறிவேப்பிலை, வெங்காயம், உப்பு சேர்த்து கலக்கவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம்.

சூடான எண்ணையில் இரண்டு கரண்டி எடுத்து மாவில் ஊற்றவும். ஒரு கரண்டி காம்பால் நன்றாக கலக்கவும்.

பிறகு எல்லாவற்றையும் சேர்த்து பிசறி எண்ணையில் தூவி விடவும். மிகவும் தூள் தூளாக தூவக் கூடாது. சிறிதும் பெரிதுமாக கட்டிகளாக இருக்க வேண்டும். பொன்னிறமானதும் அரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: