வாழைப்பூ வடை (9)
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
தேங்காய் (துருவிக்கொள்ளவும்) - 1 மூடி
சோம்பு - 1/4 தேக்கரண்டி
இஞ்சி - 1/2 அங்குலம் துண்டு
பொரிகடலை - 100 கிராம்
வத்தல் - 8
மஞ்சள்தூள் - சிறிது
சின்ன வெங்காயம் - 10
கருவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்துக்கொள்ளவும்.
வெந்ததும் தண்ணீரை நன்கு வடித்துக்கொள்ளவும்.
வேகவைத்த வாழைப்பூ உடன், தேங்காய் துருவல்,சோம்பு,இஞ்சி,பொரிகடலை,வத்தல் இவற்றை சேர்த்து கெட்டியாக அரைத்துக்கொள்ளவும்.
இத்துடன் மஞ்சள்தூள்,உப்பு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,கருவேப்பிலை, கொத்தமல்லி இலை கலந்து நன்றாக பிசைந்துக்கொள்ளவும்.
எண்ணெயை சூடாக்கி வடைதட்டுவது போல தட்டி பொறித்து எடுத்து பரிமாறவும்.