வாழைப்பூ வடை (8)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1 கப்

கடலைப்பருப்பு - 1 1/2 கப்

காய்ந்த மிளகாய் - 2

பச்சை மிளகாய் - 1

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 2

சின்ன வெங்காயம் - 10

கறிவேப்பிலை - 1/4 கப்

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை பிரித்து உள்ளே இருக்கும் பூ மற்றும் ஜவ்வு பகுதிகளை எடுத்து விட்டு ஒரு தேக்கரண்டி எண்ணெயில் வதக்கி தனியாக வைக்கவும். கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

அரைக்கும் முன்பு முதலில் காய்ந்த மிளகாய், பட்டையை போட்டு திரித்து கொண்டு இஞ்சியையும், பூண்டையும் சேர்த்து அரைத்து அதில் முதலில் ஒரு கை அளவு கடலை பருப்பை போட்டு நன்றாக அரைத்தெடுக்கவும்.

மீதி இருக்கும் கடலைப்பருப்பில் ஒரு மேசைக்கரண்டி அளவு தனியாக எடுத்து வைக்கவும். மீதமுள்ள உள்ள கடலைப்பருப்பை வைப்பரில் போட்டு கொரகொரப்பாக திரித்து எடுக்கவும்.

இப்போது எண்ணெயில் வதக்கிய வாழைப்பூ, முதலில் அரைத்து வைத்த கடலைப்பருப்பு, தனியாக எடுத்து வைத்த கடலைப் பருப்பு, கொர கொரப்பாக திரித்த கடலைப்பருப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கி போட்டு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

பிறகு வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: