வாழைப்பூ வடை (6)
1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
வாழைப் பூ - ஆய்ந்து சுத்தம் செய்தது - 1 கப்
பொட்டுக்கடலை - 4 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 4 அல்லது 5
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
தேங்காய்ப்பூ - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - 1
மோர் - 1 டம்ளர்
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
சுத்தம் செய்த வாழைப் பூவை, நீர் கலந்த மோரில், குழைந்து விடாமல் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
பொட்டுக் கடலை, மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்
பெரிய வெங்காயத்தை பொடியாக அரிந்து கொள்ளவும்.
வேக வைத்த வாழைப் பூவுடன், பொடித்த கலவை, பெருங்காயத் தூள், தேங்காய்ப் பூ, அரிந்த வெங்காயம் எல்லாம் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு, வடை தட்டும் பதத்தில் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, வடைகளாகத் தட்டி, வேக வைத்து எடுத்து பரிமாறவும்.