வாழைப்பூ வடை (5)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 150 கிராம்

பொட்டுக்கடலை - 6 மேசைக்கரண்டி

செத்தல் மிளகாய் - 5

பெருங்காயம் - கால் தேக்கரண்டியை விட குறைவு

தேங்காய்ப்பூ - 3 மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 30 கிராம்

மோர் - ஒரு டம்ளர்

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை மோர் சேர்த்து, அவித்து எடுத்து நன்கு பிழிந்துக் கொள்ளவும் (அதிகம் வேக வைக்க தேவையில்லை). பொட்டுகடலை, மிளகாய் வற்றல், தேங்காய்ப்பூ சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை தோல் உரித்து சிறுத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வாழைப்பூவுடன், நறுக்கின வெங்காயம் சேர்த்து எடுத்துக் கொள்ளவும்.

வாழைப்பூ, வெங்காயத்துடன் அரைத்த கலவை, 1 1/2 தேக்கரண்டி உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து எல்லாவற்றையும் நன்கு பிசைந்துக் கொள்ளவும்.

பிசைந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி தட்டையாக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தட்டி வைத்திருக்கும் வடைகளை ஒன்றொடு ஒன்று ஒட்டாமல் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: