வாழைப்பூ வடை (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1

கடலைப்பருப்பு - 150 கிராம்

சிவப்பு மிளகாய் - 3

சோம்பு - 1/2 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி - சிறிதளவு

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைப்பூவை காம்பு நீக்கி நல்லா பொடியாக அரிந்து மோர் கலந்த தண்ணீரில் போடவும்.பின் மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து நல்லா தண்ணீர் போக பிழிந்து வைக்கவும்.

கடலைப்பருப்பை 1/2 மணி நேரம் ஊற வைத்து சி.மிளகாய்,சோம்பு சேர்த்து அரைத்து எடுக்கவும்.

அரைத்த க.பருப்பு விழுது,வாழைப்பூ விழுது,மஞ்சள் தூள்,பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லி,உப்பு சேர்த்து நன்கு பிசைந்து சிறு சிறு வடைகளாக தட்டி நல்லா காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: