வாழைப்பூ வடை (13)
0
தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு - 1/4 கிலோ
வெங்காயம் - 150 கிராம்
பச்சைமிளகாய் - 5
சோம்பு - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிது
நறுக்கிய கொத்தமல்லி இலை - 1/2 கப்
சிறிய வாழைப்பூ - 1
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பூவைப் பொடியாக நறுக்கி கொள்ள வேண்டும்.
வாழைப்பூவை 10 நிமிடம் வேக வைத்து தண்ணீர் இல்லாமல் நன்றாக பிழிந்து கொள்ளவும்.
2 மணி நேரம் தண்ணீரில் ஊறிய கடலைப்பருப்பை மிக்ஸியில் நன்கு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
பிறகு வாழைப்பூவையும் மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று ஓட விட்டு, பிறகு கடலைப்பருப்பையும் சேர்க்கவும்.
மாவுடன் தூளாக்கிய சோம்பு, நறுக்கிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இவைகளைச் சேர்த்து வடைகளாக தட்டி மிதமான வெப்பத்தில் எண்ணெயில் போட்டு சிவக்க சுட்டு எடுத்து பரிமாறவும்.