வாழைப்பூ வடை (11)
தேவையான பொருட்கள்:
வாழைப்பூ - 1
துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு
மிளகாய் வற்றல் - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
துவரம் பருப்பை கழுவி ஒரு மணிநேரம் ஊறவிடவும்.
மிளகாய் வற்றல், சோம்பு, உப்பு வைத்து நைசாக அரைத்து அதனுடன் ஊறிய பருப்பை வைத்து தண்ணீர் சேர்க்காமல் ஒன்று இரண்டாக அரைத்துக் கொள்ளவும்.
வாழைப் பூவை ஆய்ந்து, நறுக்கி உப்பு, மஞ்சள் தூள் போட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
இதனை வேக வைக்காமலும் செய்யலாம். வாழைப்பூவினை ஆய்ந்து அலசிப் பிழிந்து அரைத்து வைத்துள்ள பருப்புடன் சேர்த்து, பொடியாக நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து பிசைந்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.
கோளா என்றால் எண்ணெய் விட்டு வெங்காயத்தை பொடியாக நறுக்கி போட்டு வதக்கி, தட்டிய வாழைப்பூ அரைத்த பருப்பு சேர்த்து பிசறி, எண்ணெயில் வேக விடவும்.
நன்றாக வெந்து பொன்னிறமாக மாறி வரும்போது இறக்கி பரிமாறவும்.