வாழைப்பூ வடை (1)
தேவையான பொருட்கள்:
அரைக்க:
கடலை பருப்பு - 2 கப்
உளுந்து - அரை கப்
பட்டை - ஒரு இன்ச் அளவில்
சோம்பு - ஒரு தேக்கரண்டி
வரமிளகாய் - 4
பொடியாய் நறுக்க:
வாழைப் பூ - 1 1 /2 கப்
பெரிய வெங்காயம் - பாதி
கறிவேப்பிலை, புதினா, மல்லித் தழை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிது
பூண்டு - 3 பல்
கடலை மாவு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். கடலை, உளுத்தம் பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக் கொள்ளவும். பொடியாய் நறுக்க வேண்டியவற்றை நறுக்கிக் கொள்ளவும். ஊறிய கடலை பருப்பில், இரண்டு தேக்கரண்டி அளவில் தனியே எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரைக்க கொடுத்தவற்றை கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த கலவையில், தனியே வைக்கப்பட்ட பருப்பு மற்றும் பொடியாய் நறுக்கிய பொருட்களை சேர்த்து நன்கு கலந்துக் கொள்ளவும்.
அந்த கலவையில் எடுத்து வைத்துள்ள கடலை மாவினையும், உப்பையும் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
உருண்டையாக உருட்டி சிறிது தட்டி, நன்கு காய்ந்த எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.