வாழைப்பூ போண்டா

off off off off off 0

தேவையான பொருட்கள்:

உளுந்து - 1/4 கிலோ

வாழைப்பூ (நடுத்தரமான அளவு) - 1

வெங்காயம் - 2

பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப

கறிவேப்பிலை - ஓரு கொத்து

தேங்காய்ப்பூ - 1/2 கப்

மிளகு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

உளுந்தை ஊறவைத்து நைசாக அரைக்கவும். தேங்காயுடன் மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உளுந்து மாவுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை காயவைத்து, பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டி போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: