வாழைப்பழ போண்டா (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பழுத்த வாழைப்பழம் - 8

கோதுமை மாவு - 4 கப்

சர்க்கரை - 2 கப்

ஏலக்காய் - 5

சோடா உப்பு - இரண்டு சிட்டிகை

தேங்காய் - 1

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஏலக்காயை பொடி செய்துக் கொள்ளவும். தேங்காயை துருவிக் கொள்ளவும்.

தேங்காயை 2 தேக்கரண்டி எண்ணெயில் வறுத்து எடுத்து கொள்ளவும்.

மாவுடன் வாழைப்பழம், சர்க்கரை, உப்பு, சோடா உப்பு, தேங்காய் துருவல், ஏலக்காய் பொடி மற்றும் தண்ணீர் சேர்த்து வடை பதத்துக்கு பிசைந்துக் கொள்ளவும்.

பிறகு உருண்டை உருண்டையாக செய்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: