வாழைப்பழ போண்டா
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
பழுத்த வாழைப்பழம் (பெரியது) - 1
சீனி - 4 தேக்கரண்டி
மைதா - 1 கப்
ரவை - 1 மேசைக்கரண்டி
கார்ன் ஃப்ளார் - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைப்பழத்தை தோலுரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்.
அதனுடன் மைதா, ரவை, கார்ன் ஃப்ளார், பேக்கிங் பவுடர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
அனைத்தையும் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் பிசைந்த மாவை உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொன்னிறமாகப் எடுத்து பரிமாறவும்.
குறிப்புகள்:
ரவை மற்றும் கார்ன் ஃப்ளார் சேர்ப்பதால் இது அதிகமாக எண்ணெய் குடிக்காது