வாழைக்காய் வடை (2)
0
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
அரிசி மாவு - 1 / 2 கப்
கடலை மாவு - 1 கப்
கொத்தமல்லி, கறிவேப்பிலை - 1 கொத்து
கொண்டைக்கடலை அல்லது பட்டாணி - 1/4 கப்
மிளகாய் - 5
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொண்டைக்கடலை அல்லது பட்டாணியை 8 - 10 மணிநேரம் ஊறவைத்து மிளகாயுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
வாழக்காயை சுட்டு/அரை வேக்காடாக வேகவைத்து துருவிக்கொள்ளவும்.
அரைத்த பருப்பு, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், அரிசி மாவு, கடலை மாவு, கொத்தமல்லி, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிசையவும்.
எலுமிச்சை அளவு மாவு எடுத்து வட்டமாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.