வாழைக்காய் வடை (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வாழைக்காய் - 2 சிறியது

முளைக்கீரை - ஒரு சிறிய கட்டு

பச்சைமிளகாய் - 6

இஞ்சி - ஒரு துண்டு

கொத்தமல்லி - கொஞ்சம்

கறிவேப்பிலை - கொஞ்சம்

பெரிய வெங்காயம் - 1

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாழைக்காயை வேகவைத்துக் கொண்டு பொடிமாசிற்கு துருவுவது போல் துருவிக் கொள்ள வேண்டும்.

முளைக்கீரை அல்லது ஏதேனும் ஒரு கீரையை கழுவி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம் முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மசித்த வாழைக்காயுடன் நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ளவற்றை வடையாகத் தட்டி எண்ணெய்யில் போட்டு எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்:

இதை தயிரில் ஊற வைத்து தயிர் வடையாகவும் உபயோகிக்கலாம்.