வாழைக்காய் போண்டா
தேவையான பொருட்கள்:
வாழைக்காய் - 2
பெரிய வெங்காயம் – 2
பச்சை மிளகாய் - 5
கரம் மசாலா தூள் - 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10 இலை
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை:
வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வாழைக்காயை போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வாழைக்காய் வெந்ததும் எடுத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்.
தோல் உரித்த வாழைக்காயை காரட் துருவியால் ஒரு தட்டில் துருவி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் துருவிய வாழைக்காய், நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றை போட்டு அதனுடன் கரம் மசாலா தூள், சீரகம், உப்பு சேர்த்து ஒன்றாக கலந்துக் கொள்ளவும்.
எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து கலந்து வைத்திருக்கும் கலவையை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து பொரித்து எடுத்து பரிமாறவும்.