வாழைக்காய் பஜ்ஜி (1)
0
தேவையான பொருட்கள்:
பெரிய வாழைக்காய் - 2
பஜ்ஜி மாவு கலக்க:
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மைதா - 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
சிவப்பு கலர் பொடி - 1/4 தேக்கரண்டி
சூடான எண்ணெய் - 1 தேக்கரண்டி
சோடா மாவு - ஒரு பின்ச்
பெருங்காய பொடி - ஒரு பின்ச்
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாழைக்காயை நீளவாக்கில் இரண்டு சைட் தோலிருக்கும் படி செதுக்கி கொள்ளவும்.
பஜ்ஜி மாவை கட்டியாக இட்லி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
செக்கிய வாழைக்காயை பஜ்ஜி மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும். எண்ணெயை நல்ல வடித்து பரிமாறவும்.