வாடா (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 படி

தேங்காய் (துருவியது) - 1

சோம்பு - 1 தேக்கரண்டி

நாட்டு வெங்காயம் - 1/4 கிலோ

பச்சை மிளகாய் - 10

கறிவேப்பிலை - 2 கொத்து

மஞ்சள்பொடி - 1 தேக்கரண்டி

தோசை மாவு - 1/2 கப்

சோடாப்பு - 1 தேக்கரண்டி

எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதல் நாளே அரிசியை ஊற வைத்து கொரகொரவென்று மிக்ஸியில் அரைக்கவும்.

பின்பு அந்த மாவில் ஒரு கப் எடுத்து கஞ்சி காய்ச்சவும். அதை ஆறவிட்டு மாவில் சேர்க்கவும்.

தோசை மாவையும் அதில் சேர்க்கவும், எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து இரவு முழுவதும் வைக்கவும், காலையில் புளித்து உப்பி இருக்கும்.

பின்பு தேங்காய் துருவலில், வெங்காயம், பச்சை மிளகாயை சின்னதாக நறுக்கி போடவும், சோம்பை கொரகொரப்பாக அரைத்து போடவும்.

மேலும் மஞ்சள், உப்பு, கறிவேப்பில்லை ஆகியவற்றை போட்டு அடுப்பில் வைத்து 5 நிமிடங்கள் கிளறவும்.

மாவில் தேவையான உப்பு, சோடா உப்பு போட்டு பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய விடவும் பின்பு ஒரு ப்ளாஸ்டிக் பையை விரித்து அதில் மாவை சிறிது வைத்து ரவுண்டாக தட்டவும்.

அதன் மேல் கிளறி வைத்துள்ள தேங்காய் கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து மாவின் மேல் வைத்து பரப்பி அதன் மேல் மேலும் மாவை வைத்து வடை போல் தட்டவும்.

1/2 அங்குலம் உயரம் இருந்தால் போடும் உளுந்து வடை போல் நடுவில் ஓட்டை செய்து கையில் எடுத்து எண்ணெயில் விடவும்.

பக்கத்தில் ஒரு கோப்பையில் தண்ணீர் வைத்துக் கொள்ளவும். தண்ணீரை தொட்டு எடுத்தால்தான் ஒட்டாமல் வரும் எண்ணெயில் விடும் போது கவனமாக விடவும்.

வாடா சிறிது வெந்தவுடன் திருப்பி போடவும் நன்கு வெந்து நுறை அடங்கியவுடன் எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: