வடை மாலை வடை
1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
கறுப்பு உளுத்தம் பருப்பு - 1 கப்
மிளகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
பெருங்காயதூள் - 1/4 தேக்கரண்டி
அரிசி - 3 தேக்கரண்டி
எண்ணெய் - வடை பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தோலோடுள்ள உளுத்தம் பருப்பை 25 நிமிடம் ஊற வைக்கவும்.
நன்றாக தண்ணீரை வடித்து விட்டு அரிசி சேர்த்து நன்றாக தண்ணீர் விடாமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும்,
அதில் மிளகு, சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்..
ஒரு ப்ளாஸ்டிக் பேப்பரில் மெல்லிய வடைகளாக தட்டி பொரித்து எடுத்து பரிமாறவும்.