வடை கறி
தேவையான பொருட்கள்:
வடைக்கு:
கடலை பருப்பு - 1 டம்ளர்
காய்ந்த மிளகாய் - 2
இஞ்சி - ஒரு துண்டு
உப்பு - தேவையான அளவு
வடை கறி தாளிக்க:
பட்டை - 2 அல்லது 3 சிறு துண்டு
சோம்பு - 1/2 தேக்கரண்டி
வெங்காயம் - 3
தனியாத் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - கொஞ்சம்
தக்காளி - 1/2
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
அரைக்க வேண்டியது:
பச்சை மிளகாய் - 4
சோம்பு - 1 தேக்கரண்டி
செய்முறை:
ஒரு வெங்காயம், கறிவேப்பிலையை வடை மாவில் சேர்த்து கலந்து வடையாக பொரித்து பொரித்ததை உதிர்த்து கொள்ளவும்.
எண்ணெயை காய வைத்து பட்டை, அரை தேக்கரண்டி சோம்பு போட்டு பொடியாக வெங்காயத்தை நறுக்கி போட்டு வதக்கவும், வதக்கி இஞ்சி பூண்டு பேஸ்ட் அரை தேக்கரண்டி போட்டு கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து தனியாதூள், மஞ்சள் துள், உப்பு போட்டு தக்காளி சேர்த்து வதக்கவும்.
பச்சைமிளகாய், சோம்பை அரைத்து வதக்கியதில் ஊற்றவும்.
தண்ணீர் இரண்டு டம்ளர் ஊற்றி கொதிக்க விட்டு உதிர்த்து வைத்துள்ள வடையையும் போட்டு நல்ல கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும்.