லெமன் முறுக்கு
0
தேவையான பொருட்கள்:
பச்சரிசி - 4 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
எலுமிச்சைச் சாறு - 1/4 கப்
எள் - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் - தேவையான அளவு
எண்ணை - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வெறும் கடாயில் உளுத்தம் பருப்பை வாசனை வரும் வரை வறுத்து, ஆற வைத்து பச்சரிசியுடன் சேர்த்து மெஷினில் நைஸாக அரைத்துக் கொள்ளவும்.
மாவை சல்லடையில் சலித்து, அதனுடன் உப்பு, எள், பெருங்காயத் தூள், வெண்ணெய், எலுமிச்சைச் சாறு சேர்த்து முறுக்கு மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை தேன் குழலாகப் பிழிந்து நன்கு வேகவிட்டு எடுத்து பரிமாறவும்.