ரொட்டி போண்டா
தேவையான பொருட்கள்:
ரொட்டி - 3
கடலை மாவு - 200 கிராம்
அரிசி மாவு - 100 கிராம்
சமையல் சோடா - ஒரு சிட்டிகை
மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி
சிவப்பு கலர் பவுடர் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1/2 துண்டு
கறிவேப்பிலை - சிறி
ரீபைண்ட் ஆயில் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ரொட்டியை சிறுதுண்டுடாக நறுக்கவும்
அத்துடன் மிளகாய் பொடி, உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கி வைத்துள்ள
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, மோர் கலந்து சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொள்ள வேண்டும்
கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் பொடி, சோடா உப்பு, கலர் பவுடர், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, இட்லி மாவு பதத்திற்கு வருமாறு போதிய அளவு தண்ணீர் ஊற்றிக் கரைத்துக் கொள்ளவும்
வாணலியில் எண்ணெயை விட்டு எண்ணெய் நன்கு காய்ந்ததும் உருட்டி வைத்துள்ள உருண்டைகளை ஒவ்வொன்றாக மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும் போட்டு நன்கு வெந்ததும் திருப்பிப் போட்டு சிவந்ததும் எடுத்து பரிமாறவும்.