ரிப்பன் பக்கோடா (1)

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

கடலை மாவு - 2 கப்

அரிசி மாவு - 1 கப்

காரப் பொடி - 1 தேக்கரண்டி

பெருங்காயம் - சிறிது

வெண்ணெய் - 4 தேக்கரண்டி

தேங்காய் எண்ணெய் - 2 தேக்கரண்டி

தண்ணீர் - தேவையான அளவு

எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெண்ணெயை உப்பு, பெருங்காயம், காரப் பொடி சேர்த்து நன்கு பிசையவும். பிறகு இரண்டு மாவையும் போட்டு தண்ணீர் ஊற்றி பிசையவும். இறுதியில் தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.

ரிப்பன் பக்கோடா அச்சில் மாவை சிறிது போட்டு சூடாக்கப்பட்ட எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.

குறிப்புகள்: