ராகி போண்டா
தேவையான பொருட்கள்:
ராகிமாவு - 1 கப்
நெய் - 1 மேசைக்கரண்டி
பூரணத்துக்கு :
உருளைக்கிழங்கு (வேகவைத்து மசித்தது)- 1 கப்
சீரகம் - 1/2 தேக்கரண்டி
நல்ல மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
பச்சைபட்டாணி - 1 1/2 மேசைக்கரண்டி
வெங்காயம் (பொடியாக நறுக்கியது) - 1 1/2 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - 1 மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கையும், பச்சைபட்டாணியையும் உப்பு போட்டு வேகவைத்து, உருளைக்கிழங்கினை தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலியில் எண்ணெய் ஒரு டீஸ்பூன் விட்டு அதில் சீரகம், வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
அதனோடு மிளகுத்தூளை சேர்த்து விட்டு 1 சிட்டிகை உப்பும் போட்டு கிளறிவிட்டு இறக்கி விடவும்.
இந்த கலவையோடு மசித்த உருளைக்கிழங்கு, வேக பச்சைபட்டாணி, கொத்தமல்லித்தழை எல்லாமும் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
ராகிமாவு, நெய், தேவையான அளவு உப்பு போட்டு சப்பாத்திக்கு பிசைவதுப்போல் பிசைந்துக்கொள்ளவும்.
மாவில் சிறிது எடுத்து சப்பாத்திகளாக உருட்டி, அதன் நடுவில் சிறிது பூரணம் வைத்து மீண்டும் உருட்டி எண்ணெயில் பொரித்து எடுத்து பரிமாறவும்.